Loading...

உழவாரத் திருப்பணிக்குழு

திருச்சிற்றம்பலம் சிவனடியார்கள் உழவாரத் திருப்பணிக்குழு என்றது சிவபெருமானின் திருவடிகளைத் தியானித்து, சிவனடியார்களின் சேவையை இறைத் தொண்டாகக் கருதி, ஆலய உழவாரத் திருப்பணிகள், ஆன்மிக செயல்பாடுகள் மற்றும் பக்தி சார்ந்த சேவைகளை ஒருங்கிணைத்து அர்ப்பணிப்பு, ஒற்றுமை மற்றும் பக்தி உணர்வுடன் இடையறாது செயல்பட்டு வரும் ஒரு ஆன்மிக சேவை அமைப்பாகும்

உழவாரத் திருப்பணி

மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை உழவாரத் திருப்பணிகள் நடைபெறுகின்றன

திருவாசகம் முற்றோதுதல்

ஒவ்வொரு மாதமும் மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் முற்றோதுதல், ஆன்மீக உணர்வுடன் நடைபெறுகிறது

மாணிக்கவாசகர் குருபூசை

ஆண்டுதோறும் மாணிக்கவாசகர் அவர்களின் திருநினைவு போற்றும் வகையில், குருபூசை நடைபெற்று வருகிறது.

திருவாதிரை விழா

மார்கழி மாதத்தின் திருவாதிரை திருநாளை முன்னிட்டு, திருவாதிரை விழா மிக சிறப்பாக நடத்தப்படுகிறது.

திருப்பணிக்குழுவின் நோக்கம்

நாமக்கல் திருச்சிற்றம்பலம் சிவனடியார்கள் உழவாரத் திருப்பணிக்குழு, ஆலயங்களை தூய்மையுடனும் மரியாதையுடனும் பாதுகாத்து பராமரிப்பதையே தனது முதன்மை இலக்காகக் கொண்ட ஆன்மீகத் தொண்டு அமைப்பாக செயல்பட்டு வருகிறது.

திருச்சிற்றம்பலம் உழவார திருப்பணி நாமக்கல்

திருப்பணிகள்

  • ஆலய கோபுரங்கள், விமானங்களில் பழுதடைந்த செதுக்கல்களை அகற்றுதல்
  • ஆலயம் சுற்றிலும் பாதையை சீர்செய்தல்
  • ஆலய உள், வெளிப்புறங்களில், நந்தவனத்தில் உள்ள தேவையற்ற புதர்களை, செடிகளைக் அகற்றுதல்
  • அகற்றப்பட்ட புதர்களை, செடிகளை ஊரடமுழுமாக வெளியேற்றுதல்
  • உழவாரம் செய்யும் அடியார்களுக்கு அன்னம் வழங்குதல்
  • ஆலய தெப்பக்குளத்தை தூர்வாரி, கோமுகி தீர்த்தத்தை சுத்தம் செய்தல்
  • ஆலய சுற்றுச்சுவர் முழுவதும் வர்ணம் பூசுதல்
  • உலோக திருமேனிகள், திருவாசி, பூஜை பாத்திரங்கள், விளக்குகளை சுத்தம் செய்து மேம்படுத்தல்
  • கற்கோயில் திருப்பணிக்கு மாதம் ஒரு ஆலயத்திற்கு நிதிகாணிக்கை வழங்குதல்

உழவாரத் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்ட கோயில்களின் விவரம்

சிவபெருமானின் திருவடிகளில் அன்பும் பணிவும் கொண்டு மேற்கொள்ளப்படும் உழவாரத் திருப்பணி என்பது உயர்ந்த ஆன்மீகத் தொண்டாகக் கருதப்படுகிறது. அந்தப் புனிதமான பணியின் அடிப்படையில், நாமக்கல் திருச்சிற்றம்பலம் சிவனடியார்கள் உழவாரத் திருப்பணிக்குழுவினால் பல்வேறு திருக்கோயில்களில் மேற்கொள்ளப்பட்ட உழவாரத் திருப்பணிகள் இங்கு தொகுத்து வழங்கப்படுகின்றன

உழவாரப்பணி மேற்கொள்ளப்பட்ட ஆலயங்கள்

திருச்சிற்றம்பலம் அறக்கட்டளை, நாமக்கல்

பதிவு எண் : 52 / 2024

<
எண் ஆலயம் மாவட்டம் தேதி
1அருள்மிகு மரகதம்பாள் உடனுறை ஸ்ரீ மங்கை பாகேஸ்வரர், மங்கலம், ஆராய்ச்சி வழி, தாத்தையங்கார்பேட்டைதிருச்சி08.09.2024
2பெரியூர் முருகன் கோவில் (அய்யம்பாளையம்)நாமக்கல்29.09.2024
3திருப்பாண்டிக் கொடுமுடிஈரோடு13.10.2024
4சி. ரெட்டியாபட்டிதிருச்சி10.11.2024
5திருப்பட்டூர்திருச்சி08.12.2024
6திருமழபாடிஅரியலூர்19.01.2025
7தலவாடி (சத்தியமங்கலம்)ஈரோடு09.02.2025
8மணலூர்பேட்டைகள்ளக்குறிச்சி23.02.2025
9திருப்பைஞ்ஞீலிதிருச்சி09.03.2025
10நாமக்கல்நாமக்கல்23.03.2025
11திருநெடுங்கலம்திருச்சி13.04.2025
12அரிமளம்புதுக்கோட்டை27.04.2025
13திருத்தரகோசமங்கைராமநாதபுரம்11.05.2025
14நா. புதுப்பட்டிநாமக்கல்18.05.2025
15சிதம்பரம்கடலூர்08.06.2025
16கூத்தப்பார்திருச்சி22.06.2025
17தஞ்சை – 14 ஆலயங்கள்தஞ்சாவூர்06.07.2025
18ராசிபுரம்நாமக்கல்27.07.2025
19தியத்தூர்புதுக்கோட்டை10.08.2025
20முத்துகாப்பட்டிநாமக்கல்24.08.2025
21தஞ்சை பெரியகோயில்தஞ்சாவூர்07.09.2025
22திருப்பூந்துருத்திதஞ்சாவூர்14.09.2025
23திருமறைக்காடுநாகப்பட்டினம்12.10.2025
24நாமக்கல் – NGO’s Colonyநாமக்கல்26.10.2025
25திருவிடைமருதூர்தஞ்சாவூர்09.11.2025
26அண்ணாமலைப்பட்டிசேலம்30.11.2025
27திருவாரூர்திருவாரூர்14.12.2025
28பொட்டிரெட்டிபட்டிநாமக்கல்21.12.2025
29திருவீழிமிழலைதிருவாரூர்11.01.2026
30காளையார்கோயில்சிவகங்கை08.02.2026
31 வில்வாரண்யேஸ்வரர் சௌந்தரநாயகி - திருக்கொள்ளம்புதூர் கும்பகோணம் 08.03.2026
32ஸ்ரீஅபயாம்பிகை அம்மை உடனாகிய ஸ்ரீ மயூரநாதர் மயிலாடுதுறை12.04.2026
33நாமக்கல் நாமக்கல்19.04.2026
34அமிர்தகடீஸ்வரர் அபிராமி கோயில் திருக்கடையூர், மயிலாடுதுறை10.05.2026
34அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவில் ராசிபுரம்17.05.2026
🔴 குறிப்பு: செம்மை நிறத்தில் குறிக்கப்பட்டவை – சிறப்பு உழவாரப்பணிகள்

ஆலயம் காக்கும் ஆன்மிக உழைப்பு

உழவாரத் திருப்பணியில் பங்கேற்கும் ஒவ்வொரு பக்தரும், தம் உடல் உழைப்பை இறைவனுக்கான காணிக்கையாக அர்ப்பணிக்கிறார்கள்.

இது அகந்தையை நீக்கி, பணிவையும் பக்தியையும் வளர்க்கும் ஒரு ஆன்மிக அனுபவமாக விளங்குகிறது. சாதி, மதம், மொழி போன்ற வேறுபாடுகள் இன்றி, அனைவரும் ஒன்றிணைந்து சேவை செய்வதன் மூலம் சமூக ஒற்றுமையும் சகோதரத்துவமும் வலுப்பெறுகிறது.

Ulavara Thirupani

உழவாரப்பணி சேவைகள்

ஆலய வளாகத்தில் அமைந்துள்ள நந்தவனம், தீர்த்தக்குளம், நீர்நிலைகள் மற்றும் திறந்த வெளிகளையும் சுத்தமாகவும் ஒழுங்காகவும் பராமரிப்பது உழவாரத் திருப்பணியின் முக்கிய பொறுப்பாகும். இதன் மூலம் ஆலயம் மட்டுமின்றி, அதன் சுற்றுப்புற சூழலும் தூய்மையாகப் பாதுகாக்கப்படுகிறது.
ஆலய கோபுரங்கள், விமானங்களில் பழுதடைந்த செதுக்கல்களை அகற்றுதல்
ஆலயம் சுற்றிலும் பாதையை சீர்செய்தல்
ஆலய நந்தவனத்தில் உள்ள தேவையற்ற புதர்களை, செடிகளைக் அகற்றுதல்
ஆலய சுற்றுச்சுவர் முழுவதும் வர்ணம் பூசுதல்
உழவாரம் செய்யும் அடியார்களுக்கு அன்னம் வழங்குதல்
ஆலய தெப்பக்குளத்தை தூர்வாரி சுத்தம் செய்தல்
கற்கோயில் திருப்பணிக்கு மாதம் ஒரு ஆலயத்திற்கு நிதிகாணிக்கை வழங்குதல்
உலோக திருமேனிகள், திருவாசி, பூஜை பாத்திரங்கள், விளக்குகளை சுத்தம் செய்து மேம்படுத்தல்
ஆலய கோமுகி தீர்த்தத்தை சுத்தம் செய்தல்